ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைதண்ணீர் வீணாக செல்கிறது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை ரெயில்வே பள்ளி அருகில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் குடியானகுப்பம் பள்ளி அருகில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. நாட்டறம்பள்ளி அருகே தொம்பசிமேடு தனியார் கல்லூரி வழிக்கு அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டறம்பள்ளி பகுதிக்கு வரவேண்டிய தண்ணீர் பல லட்சம் லிட்டர் யாருக்கும் பயன் இல்லாமல் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்கண்ட இடங்களில் குழாய் உடைப்ைப சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story