ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம்
ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம் நடத்தப்பட்டது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுபாஷ்சந்திரன் கலந்து கொண்டு சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் பாதுகாப்பில் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் பேசினார்.
இதைத்தொடர்ந்து நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, வேதியல் முறைப்படி சுவடிகள் பாதுகாப்பு முறைகள் என்ற தலைப்பில் பேசி செயல்முறை விளக்கம் அளித்தார்.
அதில் மாணவ-மாணவிகளுக்கு வேதியல் முறைப்படி ஓலைச்சுவடிகள் பாதுகாப்பது தொடர்பான செய்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் ஓலைச்சுவடிகளை வேதியல் முறைப்படி சுத்தம் செய்தனர். 2 நாட்கள் நடைபெற்ற பயிலரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story