ஒளவையார், திருவள்ளுவருக்கு மணிமண்டபம் - அமைச்சர் சேகர்பாபு
ஔவையாருக்கும், திருவள்ளுவருக்கும் மணிமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாகையில் ஔவையாருக்கும், மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கும் மணிமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, இதுவரை 8 கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் நிலையில் மேலும் 8 கோயில்களில் வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தில் மேலும் 2 கோவிலில் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Related Tags :
Next Story