தகுதியானவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம்


தகுதியானவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம்
x

தகுதியுள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்

தகுதியுள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

முதியோர் ஓய்வூதியம்

முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

தகுதி உள்ள யாருக்கும் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்படவில்லை. முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களில் கள ஆய்வின் மூலம் தாங்கள் தவறாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தால் உடனடியாக மறு ஆய்வு செய்து அவர்கள் தகுதியாக உள்ள பட்சத்தில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேலும் புதிதாக ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

பட்டா மாறுதல்

எந்த வகையிலும் ஓய்வூதியம் பெறும் முதியோரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதில்லை. பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதை தவிர்ப்பதற்காகவே இணையம் வழியாக பட்டா மாறுதல் செய்யும் வசதி செய்து தர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில் செல்போன் கையில் இருந்தாலே அதன் மூலம் முறையாக விண்ணப்பித்தால் எளிதில் பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம்.

அதற்குரிய கட்டணத்தையும் ஆன்லைன் முறையிலேயே வங்கிக்கு செல்லாமல் செலுத்தி விடலாம். இதனால் பட்டா மாறுதலில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்ப்பதோடு பொதுமக்கள் தேவை இல்லாமல் அலைக்கழிக்கப்படும் நிலையும் தவிர்க்கப்படுகிறது. மேலும் நகர்ப்புற நில அளவை வரைபடங்களையும் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கு மிகுந்த வசதியான நடைமுறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story