பழைய இரும்பு கடையில் தீ விபத்து


பழைய இரும்பு கடையில் தீ விபத்து
x

போடி அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது

தேனி

போடி அருகே உள்ள கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து. இவர் அந்த பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க போராடினர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் சின்னமுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கடையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கியாஸ் சிலிண்டர் ஆகியவை இருந்தன. ஆனால் தீயை பரவ விடாமல் அணைத்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story