மடத்துக்குளம் பஸ்நிலையத்தில் மயங்கி கிடந்த மூதாட்டி
மடத்துக்குளம் பஸ்நிலையத்தில் மயங்கி கிடந்த மூதாட்டியை போலீசார் மீட்டு விட்டில் ஒப்படைத்தனர்.
திருப்பூர்
மடத்துக்குளம் பஸ்நிலையத்தில் மயங்கி கிடந்த மூதாட்டியை போலீசார் மீட்டு விட்டில் ஒப்படைத்தனர்.
மடத்துக்குளம் பஸ் நிலையம் பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுய உணர்வு குறைந்து மயங்கிய நிலையில் படுத்திருந்தார். இதை கவனித்த ஆட்டோ நிலைய ஓட்டுனர்கள் உடனடியாக மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவருக்கு குடிநீர், உணவு கொடுத்ததோடு, மூதாட்டி குறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
இதில் அவர் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், கல் கொத்தும் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. உடனடியாக, அவரது மகன் வரவழைக்கப்பட்டு அவருக்கு தகுந்த, அறிவுரை கூறி முதியவர்களை இதுபோல தவிக்க விடக்கூடாது ஆதரவு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு ஆம்புலன்சில் ஏற்றி அவரது வீட்டில் கொண்டு இறக்கி விட்டனர்.
Related Tags :
Next Story