சாணார்பட்டி அருகே மூதாட்டி தற்கொலை
சாணார்பட்டி அருகே மூதாட்டி தற்கொலை செய்கொண்டார்.
திண்டுக்கல்
சாணார்பட்டி அருகே உள்ள நொச்சியோடைப்பட்டியை சேர்ந்த சந்தியாகு மனைவி லூர்துமேரி (வயது 75). இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறது.
இதனால் சந்தியாகு, தனது மனைவியுடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் கணவர் யாரும் இல்லாதபோது லூர்துமேரி அரளி விதையை அரைத்து சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லூர்துமேரி உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story