மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 27 Feb 2023 6:11 PM GMT (Updated: 28 Feb 2023 11:40 AM GMT)

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (வயது 65), இவர் நேற்று பாக்கி ஷாப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story