குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி பலி
கரூர் அருகே குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
குடிநீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி
கரூர் அருகே உள்ள மண்மங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முபாரக் அலி. இவரது மனைவி ஜரினாபேகம் (வயது 67). இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜரினாபேகம் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குடிநீர் தொட்டியில் கால் தவறி ஜரினாபேகம் விழுந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஜரினாபேகத்தை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜரினாபேகம் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.