ெரயில் மோதி மூதாட்டி பலி


ெரயில் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ெரயில் மோதி மூதாட்டி பலி

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் திருமால் நாடார். இவருடைய மனைவி கோமதி (வயது 82). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோமதி தினமும் காலையில் ெரயில்நிலையம் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் தோட்டத்திற்கு செல்ல புறப்பட்டார். இதற்காக ெரயில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு சென்ற ெரயில் கோமதி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கோமதி அதே இடத்தில் பரிதாபமாக பலியனார். இதுகுறித்து நாகர்கோவில் ெரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் காவலர் இசக்கிமுத்து ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story