சரக்கு ஆட்டோ ேமாதி மூதாட்டி பலி
சரக்கு ஆட்டோ ேமாதி மூதாட்டி பலி
வலங்கைமான் அருகே உள்ள வேப்பதாங்குடி கிராமம் கும்பகோணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (வயது75). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து எதிரே உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (33) என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்ேடா எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே காமாட்சி இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காமாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்த சரக்கு ஆட்டோைவ பறிமுதல் செய்தனர்.