மது விற்ற மூதாட்டி கைது


மது விற்ற மூதாட்டி கைது
x

குடியாத்தத்தில் மது விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

வேலூர்

குடியாத்தம் அடுத்த கள்ளூர் குறிஞ்சி நகர் பகுதியில் வீட்டில் வைத்து மது பாட்டில்கள் விற்பதாக வந்த ரகசிய தகவல்களின் பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் குறிஞ்சி நகரில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு வீட்டில் அற்புதம்மாள் (80) என்ற மூதாட்டி மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அற்புதம்மாளை கைது செய்து, அவரிடமிருந்து 118 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story