ரேஷன் கடையை உடைத்து திருடிய முதியவர் கைது


ரேஷன் கடையை உடைத்து திருடிய முதியவர் கைது
x

பாளையங்கோட்டையில் ரேஷன் கடையை உடைத்து திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை வாய்க்கால்பாலம் திருஞான சம்பந்த நாயனார் தெருவில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் பூட்டு நேற்று முன்தினம் உடைத்து கிடப்பதாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். விசாரணையில், அந்த கடையில் இருந்த 3 சர்க்கரை மூடைகள், எண்ணெய் பாக்கெட்டுகளை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாளையங்கோட்டை அருகே உள்ள கீழப்பாட்டம் பகுதியை சேர்ந்த முண்டன் என்ற செல்லப்பா (வயது 60) என்பவர் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து பொருட்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவர் மீது பாளையங்கோட்டை, சீவலப்பேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story