மலைப்பாம்பை வேட்டையாடிய முதியவர் கைது


மலைப்பாம்பை வேட்டையாடிய முதியவர் கைது
x

நாகா்கோவிலில் மலைப்பாம்பை வேட்டையாடி கொன்று எண்ணெய் எடுத்த முதியவரை வன ஊழியா்கள் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகா்கோவிலில் மலைப்பாம்பை வேட்டையாடி கொன்று எண்ணெய் எடுத்த முதியவரை வன ஊழியா்கள் கைது செய்துள்ளனர்.

மலைப்பாம்பு வேட்டை

நாகர்கோவில் அருகே உள்ள களியங்காடு பகுதியில் மலைப்பாம்பு வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலகத்துக்கு நேற்று இரவு தகவல் வந்தது. உடனே இதுபற்றி வேளிமலை வன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதி முழுவதும் சோதனை செய்தனர்.

அப்போது களியங்காடு பகுதியில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் ஒரு குடிசை இருந்தது. அந்த குடிசைக்கு சென்று வன ஊழியர்கள் சோதனையிட்டனர். அந்த குடிசையில் முதியவர் ஒருவர் மலைப்பாம்பை வேட்டையாடி அதிலிருந்த மலைப்பாம்பு எண்ணெய் எடுத்து ஒரு பாட்டிலில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாட்டிலில் இருந்து எண்ணெயை பறிமுதல் செய்தனர்.

முதியவர் கைது

பின்னர் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 65) என்பது, மருத்துவத்திற்காக மலைப்பாம்பு எண்ணெயை பயன்படுத்த இருந்ததும் தெரியவந்தது.

மலைப்பாம்பு என்பது வன உயிரின பாதுகாப்பு சட்ட பட்டியலில் உள்ள ஒரு வன உயிரினம் என்பதால் பாலசுப்பிரமணியன் மீது வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மலைப்பாம்பை வேட்டையாடிய பாலசுப்பிரமணியன் அதில் உள்ள கொழுப்பை எடுத்து தீயில் வாட்டி எண்ணெய் போன்று எடுத்துள்ளார். இதனை தான் மலைப்பாம்பு எண்ணெய் என கூறுவார்கள் என்றனர். மேலும் பாலசுப்பிரமணியனின் உறவினர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்கு மலைப்பாம்பு எண்ணெய் கொடுக்க அவர் இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினர்.


Next Story