முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
விருத்தாசலம் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்
கம்மாபுரம்,
விருத்தாசலம் அருகே உள்ள பரவளூர் பஸ் நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக தொங்கினார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்த புஷ்பநாதன் (வயது 70) என்பதும், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பநாதன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story