பேத்தி காதல் திருமணம் செய்ததால் முதியவர் தற்கொலை
பேத்தி காதல் திருமணம் செய்ததால் முதியவர் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம்
விழுப்புரம்:
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 81). இவரின் மகள் வழி பேத்தி, வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மணி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். இந்நிலையில் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story