முதியவர் விஷம் குடித்து தற்கொலை
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் கொமரசாமி (வயது 80). கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் கொமரசாமிக்கு உடல் நலம் சரியாகவில்லை. இதனால் சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கொமரசாமி இறந்தார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story