முதியவர் விஷம் குடித்து தற்கொலை
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
திசையன்விளை:
ஏரல் அம்மா தோப்பை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 72) இவருடைய மகள் இசக்கியம்மாள். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால் பிச்சைமுத்து தனது மகளுக்கு துணையாக அவரது வீட்டில் வசித்து வந்தார். மகளின் நிலையை நினைத்து அவர் வருத்தத்தில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று பிச்சைமுத்து உவரி கோவிலுக்கு வந்தார். வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் அங்குள்ள சாஸ்தா கோவில் பின்புறம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் மகாலிங்கம் உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story