தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளை கவுண்டர் (வயது 83). இவர் கடந்த நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு் வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த வெள்ளை கவுண்டர் அந்தியூர் கெட்டிசமுத்திரம் ஏரிப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் கயிற்றில் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெள்ளை கவுண்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story