மரத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


மரத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே எடப்பள்ளி ஆரக்கோம்பை பகுதியில் உள்ள வனத்துறை காப்புக்காட்டில் சிறப்பு ரோந்து பிரிவினர் ரோந்து சென்றனர். அங்கு ஒருவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரது உடல் அழுகி இருந்ததால், ஒரு மாதத்திற்கு முன்பு தூக்குப்போட்டு இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து வண்டிச்சோலை வனவர் முருகன் வெலிங்டன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர் யார் என விசாரணை நடத்தினர். இதில் குன்னூர் ஓட்டுப்பட்டறை முத்தாலம்மன் பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 60) என்பது தெரிய வந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story