தீக்குளித்து முதியவர் தற்கொலை
தீக்குளித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
திருத்தங்கல் எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 76). இவர் சிவகாசியில் டீ கடை நடத்தி வந்தார். இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது கால் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இடது காலிலும் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து இடது காலை எடுக்க டாக்டர்கள் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனமுடைந்த அந்தோணிராஜ் கங்காகுளம் சுடுகாட்டிற்கு சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். பலத்த தீக்காயத்துடன் அவரை மீட்ட உறவினர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் மைக்கேல்ராஜ் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.