ஆற்றில் முதியவர் பிணம்


ஆற்றில் முதியவர் பிணம்
x

தாமிரபரணி ஆற்றில் முதியவர் பிணம்

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் கீழப்பெரிய வீதியை சேர்ந்தவர் சீதாராம் மகன் வெள்ளத்துரை (வயது 68). இவர் 2 நாட்களுக்கு முன் குளிப்பதற்காக முக்கூடலில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்தநிலையில் ஆற்றில் பாலம் அருகில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தபோது அது வெள்ளத்துரை உடல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து முக்கூடல் இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story