கிணற்றில் முதியவர் பிணம்
நத்தம் அருகே கிணற்றில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
நத்தம் அருகே உள்ள முளையூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). தோட்ட காவலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக நத்தம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர். விசாரணையில், அவர் காணாமல்போன அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை பிரதே பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.