அரசு பஸ் மோதி முதியவர் சாவு


அரசு பஸ் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே அரசு பஸ் மோதி முதியவர் சாவு டிரைவர் கைது செய்யப்பட்டார்

நாகப்பட்டினம்

நாகூர்:

திருவாரூர் மாவட்டம் வண்டாரம்பாளை பிடாரி கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது58). இவர் நேற்று முன்தினம் இரவு நாகூர் - நரிமணம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திருவாரூருக்கு சென்றுகொண்டு இருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக கோவிந்தராஜ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கோவிந்தராஜ் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ் டிரைவர் திருப்பாதான்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story