மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
திருவாடானை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா பாரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன்.(வயது 75). இவர் சம்பவத்தன்று திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பெரியண்ணன் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பெரியண்ணனின் மகன் மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருவெற்றியூர் அன்னை நகரை சேர்ந்த பசுபதி (35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story