நம்பியூர் அருகே வாகனம் மோதி முதியவர் சாவு


நம்பியூர் அருகே வாகனம் மோதி முதியவர் சாவு
x

நம்பியூர் அருகே வாகனம் மோதி முதியவர் சாவு

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர்மேடு காளியம்மன் நகரை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 70). ரியல் எஸ்டேட் தரகராக தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி மாசிலாமணி. கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் குருமந்தூர் மேட்டில் ரோட்டு ஓரமாக தெய்வசிகாமணி சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.


Next Story