விபத்தில் முதியவர் சாவு


விபத்தில் முதியவர் சாவு
x

ஆர்.எஸ்.மங்கலத்தில் விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம் முகமது கோயா தெருைவ சேர்ந்தவர் சந்தியாகு(வயது 70). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகே உள்ள தனது கடைக்கு சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த செட்டியமடையை சேர்ந்த தேத்தரசன்(45) என்பவர் சந்தியாகு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.


Related Tags :
Next Story