ரெயில் நிலையத்தில் முதியவர் திடீர் சாவு


ரெயில் நிலையத்தில் முதியவர் திடீர் சாவு
x

ேபட்டை ரெயில் நிலையத்தில் முதியவர் இறந்தார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே சுத்தமல்லி விஸ்வநாத நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 70). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவில் நெல்லையை அடுத்த பேட்டை ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள இருக்கையில் படுத்து தூங்கினார். பின்னர் அவர் நள்ளிரவில் திடீரென்று இறந்து விட்டார்.

நேற்று தட்கல் டிக்கெட் முன்பதிவுக்காக அதிகாலையில் ரெயில் நிலையத்துக்கு சென்றவர்கள், அங்கு கனகராஜ் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பேட்டை போலீசார் மற்றும் நெல்லை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, இறந்த கனகராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story