குளத்தில் மூழ்கி முதியவர் பலி


குளத்தில் மூழ்கி முதியவர் பலி
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சியில் குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார்.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே கீழஆம்பூர் மஞ்சபுளி காலனியை சேர்ந்தவர் வேலு (வயது 85). இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை கீழஆம்பூர் பகுதியில் உள்ள பச்சேரி குளத்தில் குளிக்க சென்றார். அப்போது, அவர் குளத்தின் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் குளத்திற்கு சென்று தேடினர். பின்னர் அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி வேலு உடலை மீட்டனர். தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story