மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் அரசுவிளையை சேர்ந்தவர் தேவசிகாமணி (வயது 87). வயது முதிர்வு காரணமாக அவர் வீட்டில் இருந்து வந்தார். மேலும் இவர், தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினமும் தோட்டத்திற்கு சென்ற அவர் அங்கு நின்ற மரத்தில் முருங்கைக்காய் பறிக்க ஏறினார். அப்போது திடீரென தேவசிகாமணி மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவசிகாமணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜேஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.