'ஓட்டி பார்த்து வாங்குகிறேன்' பைக்கை திருடி கொண்டு முதியவர் தப்பி ஓட்டம் - வேளாங்கண்ணியில் பரபரப்பு


ஓட்டி பார்த்து வாங்குகிறேன் பைக்கை திருடி கொண்டு முதியவர் தப்பி ஓட்டம் - வேளாங்கண்ணியில் பரபரப்பு
x

வேளாங்கண்ணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி பைக்கை திருடி சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் மாவட்டம், பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் வேளாங்கண்ணி ஆர்ச்சில் பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் வாங்க வந்துள்ளார்.

அப்போது அந்த முதியவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்து விட்டு வாங்குவதாக கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த மூர்த்தி ஓட்டிப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளை கொடுத்துள்ளார். ஆனால், மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்ற முதியவர் வெகுநேரமாகியம் திரும்பி வரவில்லை.

அதன் பிறகு தான் முதியவர் தன்னை ஏமாற்றி விட்டு மோட்டார் சைக்கிளை திருடி சென்றது மூர்த்திக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூர்த்தி வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story