கூத்தூர் ரெயில் நிலையத்தில் முதியவர் பிணம்
கீழ்வேளூர் கூத்தூர் ரெயில் நிலையத்தில் முதியவர் பிணமாக கிடந்தார்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே கூத்தூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை ரெயில்வே தண்டவாள பராமரிப்பு ஊழியர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது நடைமேடையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அவர், . இதுகுறித்து நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நாகை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் உயிரிழந்த முதியவர் நேற்று முன்தினம் கூத்தூர் ரெயில் நிலையத்தில் தங்கிவிட்டு சென்றது தெரிய வந்தது. அவரது உடமைகளை பரிசோதனை செய்த போது எந்த விவரமும் கிடைக்கவில்லை. மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.