ஜோலார்பேட்டை அருகே பிணமாக கிடந்த முதியவர்-போலீசார் விசாரணை


ஜோலார்பேட்டை அருகே பிணமாக கிடந்த முதியவர்-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 March 2023 11:59 PM IST (Updated: 15 March 2023 4:03 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே பிணமாக கிடந்த முதியவர் யார் என்பது குறித்து-போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே பிணமாக கிடந்த முதியவர் யார் என்பது குறித்து-போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டையை அடுத்த சாலை நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மது போதையில் மயங்கிய நிலையில் இருப்பதாக எண்ணி அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றியுள்ளனர். ஆனால் அவர் எந்த அசைவும் இன்றி இறந்து கிடந்தார்.

பின்னர் இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தது இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story