முதியவருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
திருச்சுழியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 75). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து கருப்பையாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.
Related Tags :
Next Story