லாரி மோதி முதியவர் பலி


லாரி மோதி முதியவர் பலி
x

லாரி மோதி முதியவர் பலியானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 80). இவர் நேற்று தமிழ் வருடப்பிறப்பு செலவிற்காக தான் வளர்த்த ஆட்டுக்கிடாவை விற்பதற்காக உடையார்பாளையம் வாரச் சந்தைக்கு திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுக்கிடாவுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கடலூர் மாவட்டம், விழுப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் செல்வராஜ்(33) என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி மற்றும் ஆட்டுக்கிடா மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆட்டுக்கிடாவும் இறந்து விட்டது. இச்சம்பவம் குறித்து அவரது மகன் உலகநாதன் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் லாரி டிரைவர் செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story