வேன் மோதி முதியவர் பலி


வேன் மோதி முதியவர் பலி
x

வேன் மோதி முதியவர் பலியானார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி மேற்கு காலனியில் வசிப்பவர் மகாலிங்கம் (வயது 60). இவர் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று வெம்பக்கோட்டையில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது இனாம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த மருதுபாண்டி (23) என்பவர் வேனில் வந்து கொண்டிருந்தார். அப்போது துலுக்கன்குறிச்சி அருகே உள்ள மூலக்கரை பகுதியில் மகாலிங்கம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியது. இதில் தடுமாறி விழுந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் மருது பாண்டியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story