மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு


மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு  தீர்ப்பு
x

மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் பலாத்காரம்

குமரி மாவட்டம் தாழக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சிதம்பரம் பிள்ளை (வயது 62). இவர் சுமார் 40 வயதுடைய ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கடந்த 17-9-2018 அன்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டி இருந்ததால் தன் மகளை பார்த்துக் கொள்ளும்படி சிதம்பரம் பிள்ளையிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்தி அந்த பெண்ணை சிதம்பரம் பிள்ளை பலாத்காரம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

7 ஆண்டு ஜெயில்

மேலும் இதுதொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிதம்பரம் பிள்ளையை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட சிதம்பரம் பிள்ளைக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத காலம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஏ.என்.லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினார்.


Next Story