மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 69). இவர் கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் புன்னம் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப்புதூர் ஈ.பி. ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்த தம்பிராஜ் (36) என்பவர்ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் செல்வராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன், விபத்தை ஏற்படுத்திய தம்பிராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story