வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்


வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி, வீரவிளையை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 69). திருவிழா மிட்டாய் கடைகளில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் தனது அண்ணனின் வீட்டில் மாடியில் உள்ள அறையில் வசித்து வந்தார். அண்ணன் இறந்தபிறகு அவரது குடும்பத்தினர் இவரை பராமரித்து வந்தனர். மேலும், அய்யப்பன் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு அண்ணனின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அருகில் உள்ள அவரது மகளின் வீட்டில் சென்று தங்கினார். வீட்டில் அய்யப்பன் மட்டும் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் உள்ளவர்கள் அய்யப்பனை பார்க்க வந்தனர். அப்போது அவர் மாடியில் உள்ள அறையில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story