புதர்மண்டி கிடக்கும் பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்
திருவீழிமிழலையில் புதர்மண்டி கிடக்கும் பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குடவாசல்:
திருவீழிமிழலையில் புதர்மண்டி கிடக்கும் பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புதர்மண்டி கிடக்கிறது
குடவாசல் அருகே திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், விளாகம், வடுகக்குடி, அன்னியூர், ஆதம்பார், திருவீழிமிழலை உள்ளிட்ட பல்ேவறு கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி இடிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்டது. இதனால் இங்கு சிகிச்சை பெற நோயாளிகள் அச்சப்பட்டனர்.
விஷ பாம்புகள் நடமாட்டம்
இதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழைய ஆரம்ப சுகாதார நிலையம் அருகே புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
செடி, கொடி வளர்ந்து புதர்மண்டி கிடைக்கும் பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் விஷமுள்ள பாம்புகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்த பாம்புகள் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுவதால் நோயாளிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், பழைய கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழைக்காலம் ெதாடங்க உள்ளதால் சிகிச்சைக்காக நோயாளிகள் அதிகம் அளவில் வருவார்கள். புதிய கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், புதர் மண்டி காணப்படும் பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.