மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிப்பு:தொழிலாளி கைது
மெஞ்ஞானபுரம் அருகே மூதாட்டியை தாக்கி சங்கிலி பறித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கலியன்விளையை சேர்ந்த தங்கமுத்து மனைவி ராஜாத்தி (வயது 90). இவர் நேற்று முன்தினம் வீட்டின் முன்புள்ள திண்ணையில் உட்கார்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (41) என்பவர் ராஜாத்தி அணிந்திருந்த 3பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அதிர்ச்சி அடைந்த ராஜாத்தி போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் திரண்டு செல்வராஜை பிடித்து மெஞ்ஞானபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுறித்து அந்த போலிசார் வழக்குப்பதிவு ெசய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story