தீக்குளித்து மூதாட்டி தற்கொலை


தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
x

தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா மனைவி பவுன் பாண்டியம்மாள் (வயது 65). இவருக்கு குடலில் புண் ஏற்பட்டு வேதனை அடைந்து வந்தார்.

இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பவுன் பாண்டியம்மாள் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story