மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
மதுரை
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 80). இவருடைய பேரன் கடந்த ஒராண்டிற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஜெயலட்சுமி மனஉளைச்சலில் இருந்து வந்தார். அது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி பேசி வருந்தி கொண்டிருந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தீடீரென்று உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story