மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
x

நோயினால் அவதியுற்ற மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்வேலம் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 65).

இவர் கடந்த ஒரு வருடமாக பக்கவாத நோயினால் அவதியுற்று வந்தார்.

இதனால் மனமுடைந்த அவர் இன்று வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு, தீ வைத்துக் கொண்டார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

பின்னர் அவர்ல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூர் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story