தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
தஞ்சாவூர்
மதுக்கூர்
மதுக்கூர் அருகே உள்ள அண்டமி ஆதிதிராவிடர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது60). கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கண் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். சிகிச்சை பெற்றும் கண் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்றுமுன்தினம் நாகம்மாள் தனது உடலில் தீவைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நாகம்மாள் மகள் மாதவி மதுக்கூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story