மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
x

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் பழைய காலனியை சேர்ந்த முத்துசாமியின் மனைவி நல்லசெல்லம் (வயது 60). இவரது கணவர் இறந்து 17 ஆண்டுகள் ஆகிறது. மகனும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். மகளை மயிலாடுதுறையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் தனியாக வசித்து வந்த நல்ல செல்லம் கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் கணவரும், மகனும் இறந்ததை எப்போதும் நினைத்து கொண்டிருந்த நல்ல செல்லம் மனநிலை பாதிக்கப்பட்டது போல் யாருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 1-ந்தேதி நீலகிரியில் வசிக்கும் கொழுந்தனார் மகன் இறந்ததால், துக்க காரியத்துக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் காலை சொந்த ஊர் திரும்பினார். அப்போதும் அவர் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டில் இருந்த நல்ல செல்லம் திடீரென்று மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். அப்போது தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நல்ல செல்லத்தின் உடல் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து காப்பாற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நல்ல செல்லம் உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடOld woman commits suicide by setting herself on fireத்தி வருகின்றனர்.


Next Story