மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தீக்குளித்து தற்கொலை
பெரம்பலூர் புறநகர் அரணாரை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராமாயி(வயது 75). இவரது கணவர் ஆறுமுகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு நீலம்மாள் (55), மலர்ஜோதி (53) என்ற 2 மகள்களும், மகேந்திரன் (50) என்ற மகனும் உள்ளனர். ராமாயி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாகவும், உடல் நலக்குறைவாலும், அவரை யாரும் பார்க்காமல் இருந்ததாலும் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது வீட்டின் முன்பு கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடலில் தீ பரவிய நிலையில், சிறிது நேரத்தில் அவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமாயியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.