கடற்கரையில் மூதாட்டி பிணம்


கடற்கரையில் மூதாட்டி பிணம்
x

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. சம்பவம் குறித்து திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து கொடுத்த புகாரின் பேரில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் உடலை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story