பால் வேன் மோதி மூதாட்டி சாவு
ஆரணி அருகே பால் வேன் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி அருகே கனிகிலுப்பை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மனைவி கன்னியம்மாள் (வயது 76). இவர் இன்று பகலில் கங்கை அம்மன் கோவில் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆரணியில் இருந்து மட்டதாரிக்கு பால் ஏற்றி வந்த மினி வேன் கன்னியம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கன்னியம்மாளின் மகன் ஏழுமலை ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவிடு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story