சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை காருண்யபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்டன் (வயது35). இவர் ஊரம்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய தாயார் பியாட்ரோஸ்மேரி (52). சம்பவத்தன்று மாலையில் பியாட்ரோஸ்மேரி வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் 15 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பியாட்ரோஸ்மேரி மீது மோதியது. இதல் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பியாட்ரோஸ்மேரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பியாட்ரோஸ்மேரியின் மகன் செல்டன் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க கொடுத்த சிறுவனின் தந்தையான டென்னீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.